Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கை கால் குடைச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...?

கை கால் குடைச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...?
கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால்  குடைச்சல் ஏற்படக்கூடும். ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தாலும்,கை, கால் உளைச்சல் இருக்ககூடும்.

நரம்பு பாதிப்படைந்து இருப்பது, வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் அதுவும் ஒரு காரணமாகும். இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 
 
வேலையின் காரணமாக வரலாம். உதாரணமாக சுமைதூக்கும் தொழிலாளிகள், விவசாய வேலை, தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் பல மணி நேரம் வேலை, மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது.
 
மேலும் மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஆகியவையும் காரணமாகும். இது பரம்பரைக்கும்  வரும் என்று கூறமுடியாது. குடைச்சல் வரப்போவதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்.  படிப்படியாக முழங்கால் வரை அதிகரிக்கும்.
 
இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற உணர்வுகள், இருப்பது. குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்து போதல் ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது, சுருக் என்ற வலி போன்ற உணர்வுகள்  இருப்பதுண்டு.
 
இந்த அறிகுறி பெண்களுக்கு இருந்தால் இடுப்பு வலி மற்றும் தலைவலி வரும். சிலருக்கு தூக்கமின்மை ஏற்படலாம். உற்கார்ந்து துணிதுவைக்க முடியாத நிலை, வீட்டு வேலைகளைச் சரியாக செய்ய இயலாத நிலைஏற்படும். சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக  பாதிப்பு,முடி உதிர்தல் ஆகியவையும் சேர்ந்து கொண்டு மேலும் தீவிரமாக்கும்.
 
வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். மற்றும் மருந்துகள் மூலம் ரத்தத்தில்  உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்த முடியும். மேலும் சில எளிய உடல் பயிற்சி, மற்றும்  நடைப்பயிற்சிகள் மூலமும் வலி வராமல் தடுக்க முடியும்.
 
மருத்துவரை பார்க்காமல் அவரின் ஆலோசனை இல்லாமல், சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். மருந்து  கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை உங்கள் மருத்துவர் பரிசோதித்த பின் அவரின் ஆலோசனை பெற்றப்பின் எடுத்து கொள்ளலாம். இதனால்  தற்காலிக மாக வலியைக் குறைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுரையீரல் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகள்...!!