Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி உணவில் வெண்டைக்காயை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்...!!

அடிக்கடி உணவில் வெண்டைக்காயை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்...!!
வெண்டைக்காயின் வழவழப்பாக இருக்க காரணம் அதில் இருக்கும் பெக்டின் என்ற பொருள்தான். வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 

மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் கம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.
 
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.
 
வெண்டைக்காயில் இருக்கும் கொழ கொழ சத்து குடலுக்கு இதத்தை அளிப்பதுடன், வேண்டாத கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது.மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான காய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. 
 
இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறவைத்து அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் கொண்டை கடலை...!!