Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காண வேண்டுமா...?

Webdunia
தினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.

கட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.
 
கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.
 
அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர  தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்.
 
வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.
 
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments