சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆயுர்வேத முறைகளில் மசாஜ் செய்யவும்.
ரோஜா இதழ்கள், சதாவரி, அம்லா, யஷ்டிமாடு, அனந்தமூல், அஸ்வகந்தா போன்றவை குளிர்காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்த பொருட்களாகும். வீட்டில் நீங்களாகவே இந்த பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.
முட்டை, தயிர், பால், தக்காளி, டூனா, சால்மன் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை நீங்கள் உங்களது உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்ளலாம். குளிர்காலங்களில் சூரிய ஒளியின் தீவிரம் குறைவாக இருப்பதால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, இதுபோன்ற காலங்களில், வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் இருக்க, வைட்டமின் டி நிறைந்தத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். வேண்டுமென்றால், நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகளில் கூடு வைட்டமின் டி நிறைந்த பொருட்களை பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் உங்கள் வாத தோஷத்தை சமப்படுத்த உதவுகின்றன. இதனால் உங்கள் சருமத்தில் கறைகள் மற்றும் வறட்சி ஏற்படுவது பெரும்பாலும் குறைகிறது. இவை இரண்டுமே நல்ல கொழுப்புகளால் நிறைந்தவை. அதனால், அவை உங்களது ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது.