Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டையை ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லதா...?

Advertiesment
முட்டையை ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லதா...?
பொதுவாக நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகிறோம். ஆனால் ஒரு ஆய்வின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.

குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின்பு இது முட்டை கருவிலும் பரவக்கூடும் என்பதால் நுகர்வுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும்.
 
முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி விடும். அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது.
 
இதன் விளைவாக அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. முடிவு ஆய்வுகளின்படி சிறந்த உட்கொள்ளலுக்கு அறை வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 
அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் குளிரூட்டப்பட்டதை விட வேகமாக அழுகாது. சிறந்த சுவையைத் தரும். இருப்பினும் நீங்கள் முட்டைகளை அதிக காலத்திற்கு அரை வெப்பநிலையிலோ அல்லது பிரிட்ஜிலோ வைத்திருக்கக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீரண கோளாறை போக்கும் ஏலக்காய் டீயின் நன்மைகள் !!