Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்தாக பயன்படும் மாம் பூக்கள்கள் எப்படி தெரியுமா...!!

Webdunia
வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன.
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய  வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும்.  அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
 
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும்.
 
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து  வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய்  கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்
 
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், வயிற்றுப்புண்  காணாமல் போய்விடும்.
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து, தினம்  அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும்.
 
மாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்பொல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் சீதபேதி நீங்கிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments