Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெட்ட கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது..?

கெட்ட கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது..?
நல்ல கொழுப்புச் சத்தை அதிகப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
வெந்தய விதைகள் நாம் சாப்பிடும் கொழுப்பு நிறைந்த உணவுகளின் மூலம் வரும் கொழுப்புச் சத்தை உடல் உறுஞ்சுதலைக் குறைக்க உதவும்.  ஸ்டீராய்ட் சபோனின் எனப்படும் ஒரு அங்கத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.
 
ஆளி விதையில் இதய சுகாதாரத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது.  வெந்தயத்தைப் போல இந்த விதைகளும் நிறைய நார்சத்து உள்ளடக்கியது.
 
பூண்டு எல்.டி.எல் கொழுப்பை குறைக்கின்றன,  ரத்த அழுத்தம் உயர்வதைக் தடுக்கிறது என்று கண்டறிந்துள்ளன. மேலும் மாரடைப்பு மற்றும்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைத்து, தமனிகள் சுவர்களில் தகடு படிவதைத் தவிர்க்கிறது,
 
பாதாம், பிஸ்தானியன், ஹெசல் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் ஆரோக்கியமாக தமனிகளை வைத்திருக்க உதவும்.
webdunia
ஓட்ஸ், நார் சத்துக்குக்கும் ஒரு மற்றும் பீட்டா குளுக்கான் என்று ஒரு கலவைக்கும் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன. இவை இரண்டும்  ஒன்றாக செயல்பட்டு, எல்டிஎல் கொழுப்பு அளவு குறைய வைக்கின்றன. பீன்ஸில் நிறைய நார்சத்து உள்ளடக்கியது மற்றும் அது கொழுப்பின்  அளவையும் அத்துடன் கொழுப்பு உறிஞ்சுதல் விகிதத்தையும் குறைக்க உதவும்.
 
சிறுதானியங்களை உணவில் அதுவும் காலை உணவாகச் சேர்த்து வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. எனவே உடலில் கெட்ட கொழுப்பு  சேர்வது முற்றிலுமாகத் தடுக்கப் படுகிறது. சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
webdunia
அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பினை கரைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) கெட்ட கொழுப்பினைக் கரைக்க உதவுகின்றது. அரைக் கரண்டி இஞ்சிப் பொடியைச் சுடுநீரில் கலந்து  தேன் சேர்த்துப் பருகினால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படும்.
 
இலவங்கப் பட்டையுடன் சம அளவில் மிளகு, வேப்ப இலை சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தீங்கு தரும் கெட்ட கொழுப்பினைக் கரைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் பலன் கிடைக்கும்...?