Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கை பிசின் எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....?

Webdunia
முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது.
முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். 
 
முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும். 
 
நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை  ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக  சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்.
 
முருங்கை பிசினை இடித்து தூள் செய்து பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். முகம் பொலிவு  பெரும்.
 
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட  டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது  விருத்தி செய்யும் குணம் உண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments