முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன.
கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கை பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பூ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
சில பெண்கள் மத காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அசதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.