வெங்காயத்தின் விலை அதிகமாகிக் கொண்டே போகும் வேளையில் இப்போது முருங்கைக்காயின் விலையும் அதிகபட்சமாக 600 ரூபாய் வரை சென்றுள்ளது.
வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் கனமழைப் பெய்ததன் காரணமாக வெங்காய உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இதனால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு பெரும் சுமையை உருவாக்கியுள்ளது. அதிகபட்சமாக சின்ன வெங்காயம் ரூ 200 வரையும் பெரிய வெங்காயம் 150 ரூபாய் வரையும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களின் வயிற்றில் மேலும் புளியைக் கரைக்கும் விதமாக முருங்கைக் காயின் விலையும் தொட முடியாத உயரத்துக்கு சென்றுள்ளது. திண்டுக்கல்லில் அதிகபட்சமாக ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனையறிந்த மக்கள் மேலும் அதிர்ச்சியாகியுள்ளனர்.