Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதய நோயாளிகளுக்கு அற்புத மருந்தாகும் சுக்கு !!

Advertiesment
Sukku
, புதன், 29 ஜூன் 2022 (12:53 IST)
குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.


பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

பல் வலிக்கு சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும். இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.

சுக்கு, சீரகம், கொத்தமல்லி விதை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, இரண்டு ஸ்பூன் தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்துத் தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். குடிநீரையும் வீட்டில் தூய்மை செய்யும் முறை இது.

வயிற்றுப்போக்கை நீக்க 10 கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் களியாகக் கிளறி மூன்று வேளை வீதம், மூன்று நாட்கள் உட்கொள்ள வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

சுக்கைத் தட்டி போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்கத் தலையில் நீர்க்கோர்வை தலைவலி, தீரும். ஜலதோஷத்துக்கு நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. இஞ்சி சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும், உடல் இளைக்கும்.

ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தை பராமரிக்க சந்தனத்துடன் எந்த பொருட்களை சேர்க்கவேண்டும் தெரியுமா...?