Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்...!!

Webdunia
மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் பெறப்பட்டாலும், அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும்  மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன.
இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும் வலுக்குறைந்த எலும்புகள் குறைபாட்டை  போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
 
பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு சிறந்த நிவாரணமாக இந்த மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. மூட்டுவலி, கீழ்வாதம் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.
 
மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதை சாப்பிடுபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே உடலில் வீக்கங்கள் எங்கிருந்தாலும் அவை குறைகிறது.
 
இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் இருக்கின்ற ப்ரீ ராடிக்கல்ஸ் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி, வீக்கங்களில் நோய்  பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
 
கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. மேலும் கண் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கண் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வை மங்குதல் குறைபாட்டையும் சரிசெய்கிறது.
 
மீன் எண்ணெய் இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து மாரடைப்பு, இதயத் துடிப்பு குறைதல் போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
 
மீன் எண்ணெய் மாத்திரைகளில் வைட்டமின் மற்றும் நன்மை தரும் கொழுப்பு சத்துகள், கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை  மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments