Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கை மருத்துவத்தில் அற்புத நன்மைகள் தரும் நுணா!!

இயற்கை மருத்துவத்தில் அற்புத நன்மைகள் தரும் நுணா!!
வெப்பத்தை தணிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், இரும்பு சக்தியை அதிகரிக்கவும், வயிறு புண்ணை குனமாக்கவும், மூட்டு வலியைப் போக்கவும், புற்று நோயை வராமல்  தடுக்கவும் பயன்படுகிறது.
நுணா இலைச்சாறு நாள்பட்ட புண்களையும் போக்கும் சக்தி கொண்டது. இலையிலிருந்து ஒரு வித உப்பு தயாரிக்கப்படுகிறது. இதை  மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
நுணா மரப்பட்டை காய்ச்சல், குன்மம், கழலை முதலியவர்றை குணமாக்கும். தோல் பதனிடவும் பயன்படுகிறது. வேரை கஷாயமிட்டுக்  குடித்தால் மலச்சிக்கல் இருக்காது.
 
நுணா காயை முறைப்படி புடம் போட்டுப் பொடித்து பல் துலக்கினால் பல் சொத்தை நீங்கும். காயைப் பிழிந்து சாறு எடுத்து தொண்டையில்  பூசினால், தொண்டை கரகரப்பு நீங்கும்.
 
நுணா காயைப் பிழிந்து சாறெடுத்து தொண்டையில் பூச, தொண்டை நோய் நீங்கும். பழத்தைப் பக்குவப்படுத்தி, சீதக்கழிச்சல் மற்றும் ஆஸ்துமாவிற்குக் கொடுக்கலாம். நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.
 
நுணாத்தளிர், இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன் ஒரு தேங்காய அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில்  மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க  வயிற்றுக் கோளாறு தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்ட லட்சுமிகளும் நம் உடலில் எந்தெந்த பாகங்களில் இருக்கிறார்கள் தெரியுமா...?