Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பகுதிகளும் மருத்துவகுணம் கொண்ட துத்தி செடி...!!

அனைத்து பகுதிகளும் மருத்துவகுணம் கொண்ட துத்தி செடி...!!
துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.
மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூல, பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக்  கட்டவேண்டும்.
 
துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.
 
வெள்ளைப்படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
 
துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும்  குடித்துவர உடல்சூடு குணமாகும்.
 
ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது. இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல்  வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும்.
 
துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க  உடல்வலி குணமாகும்.
 
ஒரு சிலருக்கு கிருமித்தொற்று மற்றும் பிற காரணங்களால் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.  இவர்கள் துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,  உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு அஜினோமோட்டோ ஏற்படுத்தும் ஆபத்துக்கள்...!!