Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்திரியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!

Advertiesment
முந்திரியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!
, செவ்வாய், 5 ஜூலை 2022 (13:50 IST)
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புச்சத்து, செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.


முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துகளின் அளவு உடலில் அதிகரிக்கும். இந்த சத்துக்கள்தான் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது.

மக்னீசியம் சத்துதான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலிமையாகும்.

முன்பெல்லாம் வயதானால் தான் முடி நரைக்கும். ஆனால் இப்போதோ இளம் வயதினருக்கு கூட முடி நரைக்க ஆரம்பிக்கிறது. நரைமுடியை வராமல் தடுக்க முந்திரி பருப்பை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு சத்து உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க முந்திரி உதவுகிறது. ஏனெனில் முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவை மேம்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி கருகருவென்று அடர்த்தியாக வளரவேண்டுமா...?