Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த மூலிகையில் இப்படி ஒரு மருத்துவகுணம் உள்ளதா...?

Advertiesment
Nochi Leaf
, திங்கள், 4 ஜூலை 2022 (17:55 IST)
நொச்சி இலைகளை காய்ச்சி ஒத்தனம் கொடுத்து வந்தால் முதுகுவலி, கால்வலி மற்றும் மூட்டுவலியிலிருந்து விடுபடலாம். மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டால் நொச்சி இலையை அரைத்து போட்டால் குணமாகும்.


நொச்சியின் வேர்களை கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மேலும் மூக்கடைப்பு, ஜலதோசம், சளி, தலையில் நீர்கோர்த்தல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.

நொச்சி இலைகளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராகும். மேலும் மூக்கடைப்பு, ஜலதோசம், சளி, தலையில் நீர்கோர்த்தல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

இலையின் சாறை கழுத்து, மூக்கு, கன்னம் ஆகிய பகுதிகளில் தேய்த்து வந்தால் சைனஸ் நோயிலிருந்து விடுபடலாம். நொச்சி இலையை தலயனையாகப் பயன்படுத்தி வந்தால் தலைவலி, தலைப்பாரத்திலிருந்து விடுபடலாம்.

நொச்சி இலைகளை வதக்கி ஒத்தனமிட்டு வந்தால் வீக்கம் ஏற்பட்ட இடங்களில் வீக்கங்கள் குறையும். நொச்சி இலையுடன் மிளகு, கிராம்பு, பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபடலாம்.

நொச்சியின் வேர்கள் சிறுநீரைப் பெருக்கும். மேலும், சளி, பசியின்மை, குடல்வலி மற்றும் உடலில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.    காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நொச்சியின் மலர்கள் ஏற்ற மருந்தாகும். இந்த மூலிகையை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் தரும் நன்மைகள் என்ன...?