Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

Arun Prasath

, திங்கள், 28 அக்டோபர் 2019 (14:19 IST)
மழைகாலத்தில் பெருகி வரும் வைரல் காய்ச்சலை குணப்படுத்த கூடிய வல்லமை நிறைந்தது தான் நிலவேம்பு

மாறிவரும் நவீன வாழ்க்கை முறையால், நாம் பல நோய்களுக்கு உள்ளாகிறோம். இதற்கு நம்முடைய பாரம்பரியமான தமிழ் மருத்துவத்தை மறந்துபோனதும் ஒரு காரணம்.

இந்நிலையில் நம் தமிழ் மருத்துவத்தின் சிறப்புகள் நிறைந்த நிலவேம்பு பற்றி நாம் சிறிது பார்க்கலாம். டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களிலும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் டெங்கு மட்டுமல்ல, நிலவேம்பு குடிநீரை நாம் தொடர்ந்து குடித்து வந்தால் எந்த வைரல் காய்ச்சலும் நம்மை நெருங்காது. இரண்டு தேக்கரண்டி நிலவேம்புத் தூள் கலவையுடன், இரண்டு டம்ப்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். நீரை வடிகட்டிவிட்டு பின்பு அருந்த வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளை நிலவேம்பு குடிநீரை குடித்து வந்தால், உடல்சோர்வு உடல் பலவீன, காய்ச்சல், சளி ஆகியவை தீரும்.

இந்த நிலவேம்பு குடிநீரில் சுக்கு, மிளகு, பற்படாகம், பேய்ப்புடல், கோரைகிழங்கு, சந்தனத்தூள் ஆகிய மூலிகைகளின் கலவை அடங்கியுள்ளது. இது நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததால் தான் அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் நெடுநாட்கள் வாழ்ந்தனர். நாமும் குப்பை உணவுகளை தவிர்த்து சித்தர்கள் கூறிய வழியில் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட மாதுளம் பூ!!