Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெங்கு கொசுக்கள் உள்ளதா ?டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

டெங்கு கொசுக்கள் உள்ளதா ?டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
, புதன், 23 அக்டோபர் 2019 (21:25 IST)
கரூர் அருகே புலியூர் பேரூராட்சியில் டெங்கு கொசுக்கள் உள்ளதா ? என்றும் சுகாதாரம் குறித்தும் டார்ச்லைட்டுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்திரவின் பேரில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகனும், ஆங்காங்கே தீவிரமாக நேரடி கள ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் அடுத்த புலியூர் பேரூராட்சியின் பல பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஒவ்வொரு தெருக்களின் வழியாகவும், வீடு, வீடாகவும், டார்ச் லைட் எடுத்துக் கொண்டு, ஆங்காங்கே கொசுக்கள் இருக்கின்றதா ? என்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில்,. ஆங்காங்கே டெங்கு கொசுக்கள் பரவாமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்றும், அனைத்து துறையும் ஒன்றிணைந்து நாம் டெங்கு கொசுக்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமென்றும் அதற்கு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்றும் அதற்கு அனைவரும் முழு மூச்சாக செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் புலியூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஆர்.பி.சுப்பிரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் க.பாலசுப்பிரமணியன், கரூர் மாவட்ட சுகாதாரத்துறை பூச்சியியல் வல்லுநர் அ.சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீச்சரை கத்தியால் குத்திய 11-ம் வகுப்பு மாணவன்: தப்பியோடிவிட்டதால் பரபரப்பு