Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடற்புண்களை விரைவில் குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை !!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (11:56 IST)
மணத்தக்காளி கீரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி பலப்படுத்துகின்றது. நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

அடுத்து வயிற்றுப்புண் குணமாக  காலை உணவை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடும் பொழுதும் மற்றும் அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும், வயிற்றில் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. மணத்தக்காளிக் கீரையை குழம்பு அல்லது கூட்டு போன்று செய்து சாப்பிட்டு வரும் பொழுது குடற்புண்களை ஆற்றுகிறது.
 
மணத்தக்காளி கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
 
மணத்தக்காளி கீரையைகாய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில்சாப்பிட்டு நலமோடு வாழ்வோம்.
 
மணத்தக்காளி கீரை சரும நோய்களை குணப்படுத்தும். சருமத்தில் ஒவ்வாமை தோல் எரிச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து வர சருமம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
 
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும் அதிக உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகின்றன. மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகி இருந்தால் அதை கரைக்க உதவுகின்றது. 
 
சிறுநீரைப் பெருக்கி உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. 
 
மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள் கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகள் ஒரு செடியின் இலைகளைத் தண்ணீரில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் விரைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments