Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (11:36 IST)
அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாது.

வாரம் இரண்டு முறையாவது அவரைக்காயை உணவில் சேர்த்து வருவது நல்லது மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கபம் வாதம் பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும். 
 
அவரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோன்று இதன் பிஞ்சில் துவர்ப்புச் சுவை அதிகமுள்ள இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உண்மையில் இரத்தம் சுத்தமாக இருந்தாலே தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.
 
முக்கியமாக இந்த அவரைக்காய் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் என்பதால் இரத்த அழுத்தம் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது 
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். 
 
முக்கியமாக மலச்சிக்கலைப் போக்கும் மூல நோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் மூட்டுவலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
முக்கியமாக மூளையை வலுவாக்கி அறிவுக்கூர்மையை அதிகரிக்க உதவும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அவரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments