Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குருவார பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா....?

குருவார பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா....?
, வியாழன், 16 டிசம்பர் 2021 (09:23 IST)
சூரியன், தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.
 
நாளை மார்கழி முதல் தேதி (16.12.2021) குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
 
வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள். இந்த நாளில் ஆலயம் சென்று சிவனை வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. 
 
குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
 
இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான் மற்றும் குருவாரம் என்பதால் நவகிரகத்தில் உள்ள குருபகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை வணங்கலாம். மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால் சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலிய அபிஷேகப் பொருட்களை வாங்கி தரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (16-12-2021)!