Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரைஸ் பிரான் ஆயிலின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம் !!

Rice bran oil
, வியாழன், 2 ஜூன் 2022 (09:29 IST)
அரிசித் தவிட்டு எண்ணெய் என்பது தான் ‘ரைஸ் பிரான் ஆயில்’ என அழைக்கப்படுகிறது. இது அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை சமையல் எண்ணெய்.


இதில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது  இதய நோய் வராமல் தடுக்கிறது. இது தாவர எண்ணெய்யாகவும் மற்றும் சமையல் எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ரைஸ்பிரான் ஆயிலில் ‘ஸ்குவாலின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தோலுக்கு பளப்பளப்பையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. மேலும் இது  தோலில் சுருக்கம் விழுவதையும் தவிர்கிறது. தலையில் பொடுகு வராமலும், தோலில் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது

ரைஸ் பிரான் ஆயிலில் ஒரைசனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும்.

ரைஸ் பிரான் ஆயிலில் உள்ள ‘லைபோயிட் ஆசிட்’ என்ற வேதிப்பொருள் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த எண்ணெயாக திகழ்கிறது.

இந்த எண்ணெய்யில் கொலஸ்ட்ரோல் இருக்காது. சுத்தமாக இருக்கும். இந்த எண்ணெய்க்கு என்று தனி மணமோ, சுவையோ கிடையாது. நாம் சமைக்கும் உணவின் மணத்தையும், சுவையையும் அப்படியே கொடுக்கும். இந்த ஆயில் உபயோகித்து செய்த பலகாரங்களில் சிக்கு வாசனை வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேற்றுப் புண்ணை குணப்படுத்த இதோ மருத்துவம்