பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது.
பல்வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.
உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும்.
வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.