Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை அற்புத பயன்களை கொண்டதா கரிசலாங்கண்ணி கீரை!

Webdunia
கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்கள் கரிசாலை, கரிப்பான், கைகேசி, தேக ராஜம், பிருங்கராஜம், பொற்றிலைப் பாவை, கையாந்தகரை போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இம்மூலிகையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும், அபரிமிதமாக இருக்கின்றன. மணிச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ, வைட்டமின்  சி, முதலிய சத்துக்களும், தாது உப்புக்களும், மாவுச்சத்தும், புரதம் போன்றவைகளும் இருக்கின்றன.
 
மஞ்சள் கரிசலாங்கண்ணியில் மஞ்சள் பூ பூக்கும். இது ருசியாகவும் காரமின்றி இருக்கும். இதனையே உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
 
மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் சேர்த்து வேக வைத்து சம்பாராகவும், கூட்டுக் பொறியலாகவும்,  கடையலாகவும் செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.
தினமும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை உபயோகித்து வருபவர்களுக்கு இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு இரத்தம்  சுத்தமாகும். மலச்சிக்கல் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.
 
கரிசலாங்கண்ணி இலையையும், கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு  காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர இரத்த மூலம், இரத்த சோகை, பெண்களின் மாதவிடாய்  சுழற்சி சரியாகும்.
 
கரிசலாங்கண்ணி இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து 25 மி.லி. வீதம் காலை, மாலை அருந்தி வர கல்லீரல் சுத்தம் அடையும்.  காமாலை நோய் குணாமாகும். இரத்தத்தில் உள்ள பித்த நீர் வெளியேறி இரத்த சிவப்பணுக்கள் பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments