Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலவேம்புக் குடிநீர் எதற்கெல்லாம் பயன்படுகிறது...!!

நிலவேம்புக் குடிநீர் எதற்கெல்லாம் பயன்படுகிறது...!!
நிலவேம்புக் குடிநீர் செய்ய நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர்   தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும்.
 
நிலவேம்புக் குடிநீர் மூட்டு வலியோடு சேர்ந்த காய்ச்சல் உள்பட அனைத்து வகை காய்ச்சல்களும் வராமல் தடுக்க உதவும்.
 
நிலவேம்புக் குடிநீர் குடிப்பதால் குடல் பூச்சி நீங்கும். உடல் வலுப்பெறும். பித்த அதிகரிப்பைக் குறைக்கும். சர்க்கரை வியாதிக்கு உகந்தது.
 
இந்தச் கசாயம் டெங்கு காய்ச்சலை மட்டுமல்லாது, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது.
webdunia
அதிர்ச்சியால் உண்டாகும் மயக்கம் தீரும். செரிமான கோளாறுகள் நீங்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
 
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறைய உதவும்.
 
பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக்கட்டி தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்க உதவும். காய்ச்சல் இல்லாதவர்களும் நிலவேம்புச்  கசாயத்தை பருகிப் பயன் பெறலாம்.
 
நிலவேம்புக் குடிநீரில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும்   கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா எப்படி செய்வது...?