Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த மூலிகைகள்..!

Webdunia
மலைவேம்பு: 10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள்  நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும்.
முடக்கறுத்தான்: இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி  வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.
 
வல்லாரை: இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.
 
மூக்கிரட்டை: இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம். இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
பொடுதலை: இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம், இரத்தமூலம் தீரும். சமூலச் சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வர கொடுகு தீரும்.
 
வெற்றிலை: 5 மி.லி. வெற்றிலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும். வெற்றிலையை மார்பகத்தில் ஒட்டி வைக்க பால்சுரப்பைத் தடுக்கும்.
 
வெள்ளறுகு: சமூலத்தை அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளிக்க சொறி, சிரங்கு தீரும். மாதவிடாயின் முதல் 3 நாட்கள் சமூலத்தை அரைத்து எலுமிச்சங்காயளவு குடிக்க கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு தீரும்.
 
விஷ்ணுகிரந்தி: சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments