Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிராய்லர் கோழியை உண்பதால் ஆண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா...?

Advertiesment
பிராய்லர் கோழியை உண்பதால் ஆண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா...?
ஆண்மைக்குறை பிரச்சனை ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப் பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பாக, விரைவு உணவுகளும் மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.
 
கொழுகொழுவென்று சதை நிறைந்து காணப்படும். இந்த கறிக்கோழிகள் நிச்சயம் சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கும். சதைப்பற்று நிறைந்த இந்த கறிக்கோழிகளில் சிக்கன் 65, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ் என விதம்விதமாகச் சமைத்துத் தரும்போது  நம்மையும் அறியாமல் நம் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்யும். ஆனால் அந்த `பிராய்லர் சிக்கன்' கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் யாருக்கும் எவ்வித அச்சமும் இல்லை.
webdunia
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அசட்டையாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை,  ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
 
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர்  சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது.
 
முட்டைக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் வெள்ளைக்கரு அதிகமாக இருக்கும். இதைச் சாப்பிடுவதால் எந்த பலனும்  கிடையாது. முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் சேவலில் இருந்து விந்துக்களை சேகரித்து ஊசி மூலம் கோழிகளுக்குச்  செலுத்தப்படுகிறது. இப்படி உருவாகும் முட்டையில் நாம் சத்துகள் இல்லை என்பதை அறியவேண்டும். ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கனைத் தவிர்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடுதலை கீரை எதற்கு பயன்படுகிறது அதன் பயன்கள் என்ன தெரியுமா....?