Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுதலை கீரை எதற்கு பயன்படுகிறது அதன் பயன்கள் என்ன தெரியுமா....?

Advertiesment
பொடுதலை கீரை எதற்கு பயன்படுகிறது அதன் பயன்கள் என்ன தெரியுமா....?
இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.
நீரிழிவு நோய்: நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.
 
இருமல்: இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து  சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
 
அக்கிப் புண்: உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல்  நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.
 
பொடுகு: பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
 
வெள்ளைப்படுதல்: பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
 
சிறுநீரக நீர்த்தாரைப்புண்: நூறு கிராம் பொடுதலை இலையை அரை டம்பளர் நீரிலிட்டுகாய்ச்சி கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர  சிறுநீரக நீர்த்தாரைப்புண் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் கொள்ளு...!!