Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் அத்தி !!

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் அத்தி !!
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:07 IST)
மலச்சிக்கல் விலக, வழக்கமான உணவுக்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கல் தொந்தரவு தீருவதற்கு இரவுதோறும் ஐந்து பழங்களை உண்டுவர நல்ல குணம் தெரியும்.


அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து தினசரி இரண்டு பழங்களைச் சாப்பிட்டுவருவது போதைப் பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்துக்கு கைகண்ட மருந்து.

அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகள் அதிக அளவில் பொதிந்துள்ளது. பலவீனமானவர்களுக்கும் ஜுரத்தில் கிடந்தவர்களுக்கும் உடல் தெம்பாக அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பிளவை, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அத்திப்பாலை பத்து போட்டால், விரைவில் குணம் தெரியும். வாத நோய்களுக்கு அத்திப் பாலை வெளிப்பூச்சாகத் தடவலாம். மூலம், பெரும்பாடு, ரத்த மூத்திர நோய்களுக்கு உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.

அத்திப்பட்டையில் மோர்விட்டு இடித்துப் பிழிந்த சாற்றைத் தொடர்ந்து குடித்துவந்தால் பெண்களைப் படுத்தி எடுக்கும் பெரும்பாடு ஓடிப்போகும். இதையே வேறு முறையில், அத்திப்பட்டையை நன்றாக இடித்து பஞ்சு போன்று மிருதுவாக்கி, சமையலுக்குப் பயன்படுத்தாத பாத்திரத்தில் போட்டு, அரைப் படி நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு வரும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, தினசரி மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இந்தக் கஷாயத்தை குடித்துவந்தால் உதிரப்போக்கு, ஆசனக் கடுப்பு, சீத ரத்தபேதி போன்றவைக்கு தீர்வு கிடைக்கும்.

அத்தி இலையை இரண்டு அல்லது மூன்று எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, பின்பு அதனை தேநீர் போன்று தினமும் குடிக்க வேண்டும்.

புண்பட்ட இடத்தில் அத்தி இலையை அரைத்து பூசினால் புண் விரைவில் குணமாகும். அதுமட்டுமல்லாது தோல் நோய் பிரச்சனையையும் இது குணப்படுத்தும். அத்தி இலையை அப்படியே சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் அற்புத மருத்துவகுணங்கள் !!