Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டிய பீச் பழம் !!

உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டிய பீச் பழம் !!
, புதன், 2 பிப்ரவரி 2022 (14:26 IST)
பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள தால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சருமச் சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.


பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்திற்குப் போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச் பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. பீச் பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை, பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும்.

இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

இதில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது. இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டு மல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலந்தை பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக என்ன பயன் தெரியுமா...?