Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!

Webdunia
பூண்டை பச்சையாக அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் "சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்.
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க இதனை பயன்படுத்தலாம். 
 
உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற, பலரின் வயிற்றை தட்டையாக்க, பச்சை பூண்டு மிக மிக  சிறந்தது.
சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும. பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
 
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி,  குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, உடல் ஆரோக்கியம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments