பலாப்பழ சக்கவரட்டி செய்ய...!

Webdunia
கேரளாவின் ஸ்பெஷல் உணவான சக்கவரட்டி, தமிழ்நாட்டில் பலாப்பழ அல்வா என்று கூறுவதுண்டு, மிகவும் அருமையான சுவை கொண்ட இதனை  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
 
பலாச்சுளைகள் - 20
வெல்லம் - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 100 மி.லி.
 
செய்முறை:
சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும்.
 
உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய்விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை  வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும். சுவையான பலப்பழ சக்கவரட்டி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments