ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன. இதை கரு என்ற பெயரில் தொடங்கும், கருஞ்சீரகம், கருந்துளசி, கருவேப்பிலை, கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.
5 கிராம் துளசி இலையை எடுத்து இரண்டு மிளகுடன் சேர்த்து மசிய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தீராத காய்ச்சலும் குணமாகும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாய் கொப்பளித்துவிட்டு, 5 இலைகள் வீதம் உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் பிரச்சனைலிருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.
இரவு செம்பு அல்லது பஞ்ச உலோக பாத்திரத்தில் பத்து துளசி இலைகளை சிறிது நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின்னர் இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் வாய் கொப்பளித்து விட்டு, துளசி தண்ணீரை குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள அனைத்து விதமான தாதுபிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
தொடர்ந்து 48 நாட்கள் கருந்துளசியை தவறாமல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட சளி மற்றும் நுரையீரல் பிரச்சனை, கபநோய்களிடமிருந்து நம் உடலை மீட்டெடுக்கும்.
ஐந்து கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள்,10 இலை கருந்துளசி,மூன்று கற்பூரவள்ளி இலை,சிறிதளவு இஞ்சி,ஆகிய மூன்றையும் சேர்த்து 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வருகையில் மூச்சுத்திணறல் பிரச்சினையில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கும் இதுமட்டுமின்றி ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த இந்த கசாயமானது பயன்படுகின்றது.