புதினாக் கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும்.
புதினாக் கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.
தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.
புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
அடிக்கடி புதினாக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.
கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
புதினாவில் இருக்கும் மென்தால் எண்ணெய் குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பை குணப்படுத்துகிறது. மேலும் தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, சீரான சுவாசம் காற்று கிடைக்கும்படி செய்கிறது.