சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு: ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
உடலில் நீர்ச்சத்து: எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.
காய்கறி ஜூஸ்: ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.
தக்காளி: ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.