Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே டி யையும் பவானியையும் மூன்று வார்த்தைகளில் பாரட்டிய மிஷ்கின்!

Advertiesment
ஜே டி யையும் பவானியையும் மூன்று வார்த்தைகளில் பாரட்டிய மிஷ்கின்!
, வியாழன், 14 ஜனவரி 2021 (09:23 IST)
இயக்குனர் மிஷ்கின் மாஸ்டர் திரைப்படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் நேற்று வெளியானது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் இழுக்கும் படமாக மாஸ்டர் படம் அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும் படம் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டி வந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தனது உதவியாளர்களோடு திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார். தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எனது உதவியாளர்களோடு இன்று திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் பார்த்தேன். ரசிகர்களின் விசில் சத்தமும் கைதட்டல்களும் ரசித்தேன்.

விஜய் – handsome, graceful and stylish
விஜய் சேதுபதி – Raw, expolsive and Lethel
வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அவமதிக்கப்பட்டேன் - பிக்பாஸ் புகழ் சுரேஷ் கவலை !