சித்தர் நூல்களில் பித்தம் வாந்தி கப சம்பந்தமான நோய்கள் வாயுத் தொல்லை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய தேன் என்று கூறப்பட்டுள்ளது.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்க தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
தேனை வெந்நீர் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்போக்கு சரியாகும். மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க மூச்சுத்திணறல் குறையும்.
ஒரு டீஸ்பூன் அளவு பூண்டுச் சாறுடன், 2 தேக்கரண்டி தேனை சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிடுவது இரத்த கொதிப்பு சரி செய்யும்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும் வழி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இதனை தினமும் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாவதோடு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீக்கும். இதய தசைகளை வலுவடையச் செய்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல் கண்ணிலிருந்து நீர் வடிதல் கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.
அடிக்கடி ஜலதோஷம் தொண்டை புண்ணால் கஷ்டப்படுபவர்கள் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வரவேண்டும் அதன்மூலம் உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறி விடுவதோடு தொண்டைப்புண் குணமாகும்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால் முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் பிரச்னைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.