Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் !!

Advertiesment
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் !!
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.

தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பிடித்து பல்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன் பற்கள் வெண்மையாகும் பல்நோய் வராது.
 
இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப் பல்லை குணமாகி எனாமலை பாதுகாக்கிறது, மேலும் பல்வலி, ஈறுவீக்கம், ரத்தக் கசிவை குணமாகும்.
 
இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது. அது பழத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் உடலை தூய்மையாக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
 
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும். இதுபோல் தோல் நுரையீரல், மார்பகம் குறித்து பல்வேறு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
 
தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
 
ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.
 
ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும், இதயத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும் பொட்டாசியம், தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தில் ஏற்படும் தேமலை விரட்ட நாம் செய்யவேண்டியது என்ன...?