Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பாகங்களும் பயன்தரும் முருங்கை பூவின் மருத்துவ நன்மைகள்...!

அனைத்து பாகங்களும் பயன்தரும் முருங்கை பூவின் மருத்துவ நன்மைகள்...!
முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
முருங்கை மரத்தின் இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை. 
 
முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த,  கபத்தின்  செயல்பாடு சீராக இருக்கும். 
 
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல்  வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். 

webdunia

 
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி  வந்தால்  நினைவாற்றல் அதிகரிக்கும்.
 
கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.
 
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால்  தாம்பத்ய உறவில்  நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...!