Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொரியாசிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ முறை...!

Advertiesment
சொரியாசிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ முறை...!
சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய  பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இது விரைவில் சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைத்து  வகையான மீன்களான சூரை, சால்மன்,  கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக  உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.
 
செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை:
 
தோலைச் சொரிய கூடாது. ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும். ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள். 

webdunia

 
சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் சமாகும். மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
 
தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும். சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ்  தீவிரமடையும். 
 
மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்வதோடு, ஒய்வு எடுத்துக்கொள்ளவும். ஒவ்வாமை  ஏற்படுத்தகூடிய உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
 
குறிப்பு:
 
கைகண்ட மருத்துவ முறை: அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும்  வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். இவை இரண்டு அல்லது  மூன்று மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் தூளுடன் கருஞ்சீரகம் தூள் கலந்து குளித்து வரவேண்டும். இந்த வைத்திய முறை செய்து பார்த்து  பலன் கிடைத்துள்ளது. எனவே இவ்வாறு இயற்கை முறையில் செய்யப்படும் வைத்தியங்கள் பக்க விளைவுகள் அற்றது. எனவே தாராளமாக  பயமின்றி பயன்படுத்தி பலனை பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்...!