Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் – இரு கொலையில் முடிந்த விபரீதம் !

Advertiesment
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் – இரு கொலையில் முடிந்த விபரீதம் !
, திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:36 IST)
கர்நாடகாவில் மாமனார் ஒருவர் தந்த தொடர் பாலியல் தொல்லையால் மருமகள் இரு கொலைகள் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் கணவன் மனைவியான சித்தராய மல்லேஷ்வர் மற்றும் கலாவதி. இந்த தம்பதிகளின் ஒரே மகனுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. மருமகள் கீதாவும் மாமனார், மாமியாரோடு வசித்து வருகிறார்.

மாமனார் சித்தராயர் தன் மருமகள் பொருந்தா காமம் கொண்டு அவரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். மருமகள் துணி மாற்றும் போது அவர் அறைக்கு செல்வது, யாரும் இல்லாதபோது கட்டிப்பிடிப்பது போன்ற அருவருப்பான செயல்களை செய்து கீதாவுக்கு மன உளைச்சலை தந்துள்ளார். இதை எப்படி தன் கணவனிடம் சொல்வது எனத் தெரியாமல் தவித்து வந்துள்ளார். தன் மகனிடம் மருமகள் இந்த விஷயத்தை சொல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சித்தராயரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் கீதாவிடம்  அவர் வரம்பு மீறவே உச்சகட்ட கோபத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளார் கீதா. இதில் நிலைகுலைந்த அவர் ரத்தவெள்ளத்தில் விழுந்த அவர் உயிருக்குத் துடித்துள்ளார்.  இதை பார்த்து அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவியையும் கீதா அதே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க ஊருக்குள் ஹெச் ராஜா வரக்கூடாது – போஸ்டர் அடித்து ஒட்டிய மக்கள் !