சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்குக் குடிக்க காசு தராத தாயைக் கொலை செய்து அவரது மூளையை எடுத்து சமைக்க ஆரம்பித்துள்ளார் ஒரு இளைஞர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கார் எனும் பகுதியில் பூலோ பாய் என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு சீதாராம் ஓயாரான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிக்கு அடிமையாகி ஊரில் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் குடிப்பதற்காக அவரது தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் வழக்கம்போல குடிக்க காசு கேட்க, அவரின் தாய் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சீதாராம் அவரை அடித்துக் கொன்றுள்ளார். அப்போதும் ஆத்திரம் நீங்காத அவர், தாயின் மண்டையை உடைத்து மூளையை வெளியில் எடுத்துள்ளார். மூளையை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து சாப்பிட முயன்றுள்ளார். இதை பார்த்த சீதாராமின் சகோதரர் மனைவி கத்த அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இதையடுத்து போலிஸுக்குப் புகார் செல்ல, மறைந்திருந்த அவரைப் போலிஸார் கைது செய்தனர்.