இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

Prasanth K
வியாழன், 26 ஜூன் 2025 (15:17 IST)

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் பயணிக்க கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 

நாடு முழுவதும் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பல பகுதிகளிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் நிலையில், இரு சக்கர வாகனங்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றன.

 

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை வருவாயை உயர்த்த இனி இரு சக்கர வாகனங்களுக்கும் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும், இதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் பாஸ்டேக் அட்டைகளை பெற வேண்டும் என்றும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அவ்வாறான எந்த அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை என்று மறுத்துள்ளது. அப்படியான திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும், எப்போதும் போல இரு சக்கர வாகனங்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.,

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments