Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது மனைவியுடன் மட்டும் உல்லாசம் - கணவரின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

Advertiesment
2வது மனைவியுடன் மட்டும் உல்லாசம் - கணவரின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி
, சனி, 4 ஆகஸ்ட் 2018 (12:04 IST)
எப்போதும் 2வது மனைவியுடன் பொழுதை கழுத்த கணவரின் ஆணுறுப்பை அவரின் முதல் மனைவி கட் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் மாவட்டம் மிம்லானா பகுதியை சேர்ந்தவர் யூனஸ் அகமது(45). இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, மனைவியிடம் சம்மதம் பெற்று கடந்த வருடம் வேறொரு பெண்ணை அகமது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
 
இந்நிலையில், முதல் மனைவியின் வீட்டிற்கு வருவதை அகமது தவிர்த்து வந்துள்ளார். இரவு நேரங்களில் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். எனவே, இது தொடர்பாக முதல் மனைவிக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதன் காரணமாக முதல் மனைவியின் வீட்டிற்கு வருவதே தவிர்த்துவிட்டு, 2வது மனைவியின் வீட்டிலேயே இருந்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த முதல் மனைவி கடந்த 2ம் தேதி அகமதுவை தேடி, அவரின் 2வது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்ட முதல் மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. எனவே, கத்தியை எடுத்து அகமதுவின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டினார். இதனால் ஏற்பட்ட வலியில் அகமது அலறி துடித்தார்.
 
இதனால், ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அகமதுவை மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் மனைவியை கைது செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் நிலையத்தில் வாலிபர் அடித்து கொலையா? - பரபரப்பு வீடியோ