Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று பிரதமரை சந்தித்த மம்தா பானர்ஜி!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:59 IST)
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு  ஆதரவு இல்லை என  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
 
மேலும் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திலும் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments