யுபிஐ செயலி வழியாக ஜூலை மாதத்தில் மட்டும் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையை செய்யப்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தியை அடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி யுபிஐ பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டது. இந்த செயலியில் பண பரிவர்த்தனை செய்யும் தொகையின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் ஜூலை மாதத்தில் மட்டும் 600 கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது ஒரு மிகச்சிறந்த சாதனை என்றும் புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டை பெருமை அடைய செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த 5 ஆண்டுகளில் தினமும் 100 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செயல்படுத்துவதே இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.