Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NDA அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு..! ஜூன் 21-ல் நடத்த திட்டம்..!!

Senthil Velan
வியாழன், 6 ஜூன் 2024 (13:29 IST)
பாஜக கூட்டணி அரசின் மீது நாடாளுமன்றத்தில் ஜூன் 21 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. 
 
எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 
 
மோடி ராஜினாமா:
 
தனது பிரதமர் பதவியை  ராஜினாமா செய்த மோடி, 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
 
ஜூன் 8-ல் மோடி பதவியேற்பு:
 
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் மக்களவையின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், வரும் சனிக்கிழமை மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜூன் 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு?
 
பாஜக கூட்டணியில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை, பாதுகாப்புத்துறை உட்பட முக்கிய துறைகளை கேட்டு தெலுங்குதேசம் கட்சி பாஜகவுக்கு நிபந்தனை வைத்துள்ளது.

ALSO READ: சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு.! என்ன தகுதி இருக்கிறது.? கே.பி.முனுசாமி காட்டம்..!

இந்நிலையில் பாஜக கூட்டணி அரசின் மீது நாடாளுமன்றத்தில் ஜூன் 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments