பாஜக கூட்டணியில் இருந்து அஜித் பவர் வெளியேற இருப்பதாக கூறப்படும் நிலையில் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல் போனதற்கு மகாராஷ்டிரா மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் பாஜக அமைத்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் காங்கிரஸ் அதனால் தான் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இணைந்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் கண்டிப்பாக 35 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்ட உத்தவ் தாக்கரே மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது என்பதும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் அஜித் பவாரின் மனைவி கூட படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு காரணமாக மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.