Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய வெளிநாட்டினர்! – நூதனமான தண்டனை கொடுத்த போலீஸ்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (09:38 IST)
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதையும் மீறி ஊர் சுற்றிய வெளிநாட்டினருக்கு நூதனமான தண்டனையை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ரிஷிகேஷ் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது கங்கை நதியோரம் வெளிநாட்டினர் சிலரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. உடனடியாக அவர்களை அழைத்து விசாரித்ததில் ஊரடங்கை மீறி அவர்கள் ஊர்சுற்ற வெளியே வந்தது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை வழங்கிய போலீஸார் ”நான் ஊரடங்கை பின்பற்றவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என 500 முறை எழுத சொல்லியுள்ளனர். வெளிநாட்டினரும் 500 முறை அவ்வாறு எழுதி கொடுத்துள்ளனர். பிறகு இதுபோன்ற விதிமீறல்களை மீண்டும் செய்யக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments