Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கை, கால்களை கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொலை! கணவன் செய்த கொடூரம்!

Advertiesment
கை, கால்களை கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொலை! கணவன் செய்த கொடூரம்!
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:25 IST)
உத்தர பிரதேசத்தில் மனைவியை கை, கால்களை கட்டி மின்சாரம் பாய்ச்சி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கணவன் – மனைவி, காதலன் – காதலி ஒருவரையொருவர் கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படினாதொரு சம்பவம் உத்தர பிரதேசத்திலும் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது வஷி. இவருக்கும் இந்து பெண்ணான உஷா சர்மா என்பவருக்கும் சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் உஷா தனது பெயரை அக்‌ஷா பாத்திமா என மாற்றிக் கொண்டு மதம் மாறியுள்ளார்.

சமீப காலமாக தம்பதியர் இடையே அடிக்கடி வாக்குவாதம், சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பாத்திமாவை கொல்ல முடிவு செய்த முகமது வஷி அவர் தூங்கும் வரை காத்திருந்துள்ளார். பின்னர் பாத்திமாவின் கை, கால்களை கட்டி, வாயையும் துணியை வைத்து கட்டிய வஷி மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொலை செய்துள்ளார்.

பிறகு வீட்டிற்குள்ளேயே குழித்தோண்டி அதில் மனைவியை புதைத்துவிட்டு அங்கேயே உண்டு, உறங்கி வாழ்ந்து வந்துள்ளார். முகமதுவின் வீட்டிற்கு வந்த தாயார் மருமகளை காணததால் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

வீட்டை தோண்டி பாத்திமாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், முகமது மேல் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிவாசல் - ஊர் கூடி கொண்டாட்டம்